மக்களுக்கு தேவைப்படும் கருத்துக்களை எந்த சமரசமும் இல்லாமல் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதை தந்தை பெரியார் சாதித்து காட்டினார். பெரியாருக்கு பிறகு திராவிடர் கழம் ஆசிரியர் திரு.வீரமணி அவர்களின் சுயநலத்தால் ஆளுங்கட்சி ஆதரவை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பணியாற்ற தொடங்கியதும் தந்தை பெரியாரின் கொள்கைகளை முன்னெடுப்பதில் பெரியார் திராவிடர் கழகம் குறிப்பிடத்தகுந்த பணியாற்றியுள்ளது. மக்கள் மத்தியில் பெரியார் திராவிடர் கழகம் அமைப்பு ஏற்படுத்திய மிகப் பெரிய விழிப்புணர்வாக தற்போதைய ஈழப் போராட்டத்தினை குறிப்பிட முடியும்.
ஈழப் பிரச்சனையில் மக்கள் படும் இன்னல்களையும் அவலத்தினையும் தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்ததிலும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்களை திரட்டியதிலும் பெரியார் திராவிடர் கழகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. ஜெயலலிதாவை தமிழர்களுக்கு ஆதரவானவராக அடையாளம் காட்ட நேர்ந்தது தான் இந்தச் சூழ்நிலையில் அவலமான ஒன்று. திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் தன்னை ஆளுங்கட்சி ஆதரவாளராகவே தொடர்ந்து ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். இதற்கு அவர் பராமரித்து வரும் கல்விக்கூடங்கள், பெரியார் சொத்து போன்றவை முக்கியமான காரணங்கள். இவ்வாறு திராவிடர் கழகத்தின் பங்களிப்பு என்பது கல்விக் கூடங்களின் பராமரிப்பு என்றளவுக்கு சுருங்கிய பிறகு திராவிடர் கழகத்தின் தேவை தற்போதைய காலக்கட்டத்தில் முக்கியமாக உள்ள சூழ்நிலையில் பெரியார் திராவிடர் கழகம் தமிழகத்தில் மிகச் சரியான நேரத்தில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்திருக்கிறது. இதற்காக களத்தில் இருந்து பாடுபடுகிற அனைத்து தோழர்களுக்கும் என்னுடைய நன்றி.
இந்த தேர்தலில் ஈழப் பிரச்சனை ஒரு முக்கியமான பிரச்சனையாக இருக்காது, ஈழம் சார்ந்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள், ஈழப் பிரச்சனை இந்த தேர்தலில் முக்கிய பிரச்சனை இல்லை, இல்லை, இல்லவே இல்லை என்றே எல்லோரும் கூறிக் கொண்டே இருந்தனர். எல்லா தொலைக்காட்சி ஊடகங்களும் இது முக்கிய பிரச்சனை இல்லை, இல்லை என்றே கூறிக் கொண்டிருந்தன. குறிப்பாக வட இந்திய ஆங்கில தொலைக்காட்சி சேனல்களில் தோன்றும் சோவும், என்.ராமும், சுப்பிரமணியம் சுவாமியும் இது ஒரு முக்கியப் பிரச்சனை இல்லை என்று கூறிக் கொண்டே இருந்தனர். இதைத் தவிர வேறு பிரச்சனைகளைப் பற்றி இந்த தேர்தல் காலத்தில் யாருமே பேசவில்லை. இப்படி பேசிப் பேசியே இன்றைக்கு யாரும் அறியாமலேயே, அரசியல்வாதிகள் விரும்பாமலேயே ஈழப் பிரச்சனை இந்த தேர்தலில் முதல் முக்கியமான பிரச்சனையாகி விட்டது. ஜெயலலிதாவும், கருணாநிதியும் மாற்றி மாற்றி நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் ஈழப் பிரச்சனை ஒரு முக்கியமான பிரச்சனையாக உருவெடுக்க இருந்த பல காரணங்களில் (மக்களின் பேரவலம், நவீன ஹிட்டலாரக உருவெடுத்துள்ள ராஜபக்சே போன்றவை) இன்றைய தகவல் தொழில்நுட்பமும் ஒரு காரணம். 1990களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தை நோக்கி சிங்கள இராணுவம் முன்னேறிய பொழுது இந்தளவுக்கு அந்த நிகழ்வு தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. போர் அங்கே நடக்கிறது என்பது தெரியுமே தவிர அங்கு மக்கள் பட்ட இன்னல்கள் தெரியவில்லை. கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளை அப்பொழுதும் புலிகள் இழக்கவே செய்தனர். மக்கள் சிங்கள இராணுவத்தின் கொடூரமான தாக்குதல்களுக்கு இலக்காகினர். தற்போதைய தாக்குதல் போன்று இல்லை. என்றாலும் அப்பொழுதும் மக்கள் அவலங்களை எதிர்கொண்டே இருந்தனர். அக் கால கட்டத்தில் பி.பி.சி தமிழோசை மூலமாகவே ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் ”உண்மையான” செய்திகளை அறிய முடியும். ஆனந்தி அக்கா அப்பொழுது தமிழோசையில் இருந்தார். பி.பி.சி தமிழோசையை கடினப்பட்டே கேட்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. சில நேரங்களில் சரியாக கேட்காது. இந்திய/தமிழக ஊடகங்களும் அது பற்றி பேசியதில்லை. ராஜீவ் கொலைக்கு பிறகு திட்டமிட்டு அவர்கள் ஈழப்பிரச்சனையை மறைத்து கொண்டிருந்தனர்.
ஆனால் இன்றைய இணைய யுகத்தில், தொலைக்காட்சியின் வளர்ச்சியில் செய்திகள் மக்களை சென்றடைந்திருக்கிறது. நம் கையில் ஒரு உருப்புடியான ஊடகமும் இல்லாத நிலையிலும் ஈழப் பிரச்சனையை மக்களிடம் ஊடகங்களின் பெரிய உதவிகள் இல்லாமலேயே சென்று சேர்க்க முடிந்திருக்கிறது.
இந்த தேர்தலில் மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட சிடிக்கள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பெரியார் திராவிடர் கழகம் தமிழகம் முழுவதும் வெளியிட்ட ஆயிரக்கணக்கான சிடிக்கள் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறார்கள். இப்படி வீடு வீடாக சிடி விநியோகிப்பது என்பது ஒரு புதிய வியூகம். இது வரை தமிழக தேர்தல் வரலாற்றில் யாரும் இது போன்று செய்ததில்லை. இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் சிடி ப்ளோயர் இல்லாத வீடுகளே குறைவு என்றாகி விட்ட சூழ்நிலையில் இது குறிப்பிடத்தக்க மாறுதலை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. பெரிய கட்சிகளிடமும், பார்ப்பன, பனீயா வர்க்கத்தின் வசமும் உள்ள தொலைக்காட்சி ஊடகங்களை நம்பாமல் நம்மை நாமே மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள ஒரு புதிய வழியை பெரியார் திராவிடர் கழகம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால் அதில் பெரியார் திராவிடர் கழகத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.
பெரியார் திராவிடர் கழகம் தொடங்கிய இந்த திட்டத்தை பல அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகின்றன. காங்கிரசை எதிர்த்து செயல்பட்டு வரும் இளந்தமிழர் இயக்கம், மாணவர் அமைப்புகள், வழக்கறிஞர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் போன்ற எண்ணற்ற தமிழ் அமைப்புகள் இதனை செய்து வருகின்றன. இந்த அமைப்புகள் கூட தங்களுடைய பரப்புரை இந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என உணர்ந்திருக்க மாட்டார்கள். எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தமிழர்கள் மீது கொண்ட அக்கறை, ஈழத்தமிழ் மக்கள் மீது தொடுக்கப்படும் இனப்படுகொலை போன்றவை சார்ந்து தங்கள் சொந்தப்பணத்தை போட்டு இந்த அமைப்புகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. தமிழ் உணர்வும், காங்கிரஸ் மீதான கோபமும் மட்டுமே இவர்களை இந்த பரப்புரையில் ஈடுபடுத்தியது. இவர்களின் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்க தொடங்கியிருப்பதையே சமீப நாட்களில் தமிழகத்தில் காணப்படும் சூழ்நிலை தெளிவுபடுத்துகிறது.
இந்த தாக்கத்தை முக்கிய அரசியல் கட்சிகள் ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை. இதனை எல்லா அரசியல் கட்சிகளும் அலட்சியப்படுத்தி கொண்டே தான் இருந்தன. ஈழப் பிரச்சனையை சார்ந்து கூட்டணி அமைக்க நாம் வலியுறுத்திய பாமக, மதிமுக, விசி போன்றைவை கூட ஈழப் பிரச்சனை இந்தளவுக்கு தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என உணரவில்லை. ஆனால் தேர்தல் நாட்கள் நெருங்க, நெருங்க ஈழத்தில் இருக்கும் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றமும், தமிழ் அமைப்புகளின் பரப்புரையின் தாக்கமும் தற்பொழுது உணரப்படுகிறது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போன்றோர் தங்களது பணபலத்தை கொண்டு வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் அமைப்புகளின் பரப்புரை ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் புள்ளிகளின் பணபலத்தின் முன்பு மட்டுமே தோற்க முடியும். அவர்களின் பணபலம் இல்லாவிட்டால் தமிழ் அமைப்புகளின் பரப்புரை வெற்றி பெறும் என்பதே தற்போதைய களநிலவரம் என தெரிகிறது
இத்தகைய சூழ்நிலையில் காங்கிரஸ் அது போட்டியிடும் அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றால் பணநாயகத்தை மக்களின் உணர்வு அலை வென்றதாக கொள்ள முடியும். மாற்று அரசியலை முன்வைக்கும் நம்மைப் போன்றவர்களின் நிலைப்பாட்டினையும் அது பலப்படுத்தும். இந்த தேர்தலில் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு கரன்ஸி மழை பொழிந்து கொண்டிருக்கிறது. முன் எப்பொழுதையும் விட தற்பொழுது ஜனநாயகம் என்பது பணநாயகம் என்றாகி விட்டது. முன்பு ஒரு கோடி, இரண்டு கோடி என தொகுதிக்கு செலவு செய்து கொண்டிருந்த அரசியல் கட்சிகள் இன்றைக்கு நவீன பொருளாதார வளர்ச்சியில் பல கோடிகளை தொகுதிக்குள் செலவழித்து கொண்டிருக்கின்றன. தமிழக தேர்தலுக்கு மட்டும் சில ஆயிரம் கோடிகளை அரசியல் கட்சிகள் செலவு செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இப்படி ஆயிரக்கணக்கான கோடிகளை அரசியல் கட்சிகளும், அதன் பிண்ணையில் இருக்கின்ற பன்னாட்டு நிறுவனங்களும், தொழில் அதிபர்களும் செலவு செய்து கொண்டிருக்கையில் இந்திய/தமிழக அரசியலில் ”மாற்றம்” என்பதே அர்த்தமற்ற ஒன்றாகவே இருக்கிறது.
எனவே இத்தகைய அரசியலை புறக்கணிக்க வேண்டும் என மகஇக போன்ற அமைப்புகள் செல்வதில் இருக்கும் நியாயத்தை நாம் மறுக்க முடியாது. மக்கள் மீது அக்கறை கொண்ட இயக்கமாகவே இத்தகையே இயக்கங்கள் உள்ளன. அதன் கொள்கைகளில் எனக்கு பிடிப்பு உண்டு. அதே நேரத்தில் இன்றைக்கு மக்கள் தேர்தலை ஒரு சுவாரசியமான கொண்டாடமாகவே நினைக்கின்றனர். பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடி மக்களுக்கு இல்லை. இருக்கின்ற வாழ்வை அப்படியே வாழ்ந்தாலே போதும் என மக்கள் நினைக்கின்றனர். அவர்களின் சூழலை புரிந்து கொள்ளாமல் போராடு, புரட்சி செய் என்ற இடதுசாரி அமைப்புகளின் முழக்கம் மக்களிடம் அந்நியப்பட்டு நிற்கிறது. இந்த இயக்கங்கள் இருக்கின்ற வாழ்க்கையை கெடுத்து விடுவார்களோ என்ற பதட்டம் மக்களுக்கு ஏற்படுகிறது. இடதுசாரி அமைப்புகளின் முழக்கம் நேபாளத்தில் பொருந்தலாம். அங்கே அப்படியான சூழ்நிலை இருந்தது. இன்றைய தமிழகத்தில் அது எடுபடுமா ?
இத்தகைய சூழலில் இன்றைக்கு தேவை மாற்று அரசியலா, தேர்தல் புறக்கணிப்பா ?
கேள்விகளை முன்வைத்து விட்டு, அடுத்து வரும் நாட்களில் விவாதிப்போம்...
Monday, May 11, 2009
தேர்தல், பெரியார் திக, தேர்தல் புறக்கணிப்பு
இடுகையிட்டது
தமிழ் சசி / Tamil SASI
நேரம்
12:22 AM
லேபிள்கள்: CHANGE, Election Boycott, Periyar DK, தமிழகத்திற்கு மாற்றம், பெரியார் திக, மாற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- CHANGE (6)
- CHANGE for TamilNadu (5)
- Change Tamil Nadu Politics (3)
- Congress (1)
- Election Boycott (2)
- Karunanithi (2)
- Periyar DK (1)
- Raja Pakse (1)
- Sonia Gandhi (1)
- அரசியல் (4)
- இலம்பாடி (2)
- இலம்பாடியம் (1)
- சமூக மாற்றம் (1)
- சீமான் அரசியல் களம் (2)
- தமிழகத்திற்கு மாற்றம் (12)
- தேர்தல் - 2009 (1)
- பெரியார் திக (1)
- போடுங்கம்மா ஓட்டு (1)
- மணி அண்ணன் பேட்டி (1)
- மாற்றம் (11)
- மிடையம் (1)
- ராமதாஸ் (1)
- விஜய் (1)
Blog Archive
-
▼
2009
(20)
-
▼
May
(8)
- ஆனந்த விகடன் இதழுக்கு கொளத்தூர் மணி அளித்துள்ள பேட...
- சாதியை விட்டொழி!முன்னேறு! புதுவுலகு செய்!
- இந்தமுறை ஏன் ஜெயலலிதா வேண்டும் ? ஏன் கலைஞர் வேண்டா...
- எதன் அடிப்படையில் அரசியல் மாற்றம்?
- நமது நம்பிக்கைகளை நீர்க்கவைத்த நாடாளுமன்ற தேர்தல்...
- தமிழர்களின் ஊழிப்பகையான காங்கிரசைத் தண்டிப்பது எப்...
- தேர்தல், பெரியார் திக, தேர்தல் புறக்கணிப்பு
- மெல்லத் திறக்கும் தமிழ் மிடையம்!
-
►
March
(8)
- தமிழ் இலம்பாடிகளும் இலம்பாடியமும்!
- டாக்டர் ராமதாஸ் - ஒரு தமிழின துரோகி
- மார்க்கெட்டில் கிடைக்குமா மாற்றம்?
- சிதம்பரம் தொகுதியில் திருமா போட்டி
- சீமான் தேர்தலில் போட்டி - மலேசிய தமிழர்கள் தந்த மா...
- தமிழகத்திற்கு மாற்றம் தேவை....ஏன் ?
- தேர்தல் புறக்கணிப்பு அவசியமா? மாற்றம் சாத்தியமா?
- தமிழர்களே ஈழத்தமிழர் பிரச்சினையை ஓட்டரசியல் ஆக்க வ...
-
▼
May
(8)
11 கருத்துரைகள்:
//அவர்களின் சூழலை புரிந்து கொள்ளாமல் போராடு, புரட்சி செய் என்ற இடதுசாரி அமைப்புகளின் முழக்கம் மக்களிடம் அந்நியப்பட்டு நிற்கிறது. இந்த இயக்கங்கள் இருக்கின்ற வாழ்க்கையை கெடுத்து விடுவார்களோ என்ற பதட்டம் மக்களுக்கு ஏற்படுகிறது. இடதுசாரி அமைப்புகளின் முழக்கம் நேபாளத்தில் பொருந்தலாம். அங்கே அப்படியான சூழ்நிலை இருந்தது. இன்றைய தமிழகத்தில் அது எடுபடுமா ?///
ம க இ க தேர்தல் புறக்கணிப்பை முன் வைத்து நடத்திய மே 1 மாநாட்டில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.... இது நீங்கள் சொல்லுவது போன்ற நிலை இருப்பதை காட்டவில்லை.
அரசியல் செயலூக்கமின்மையை நாம் மக்கள் மீது பழி போட்டு ஏமாற்றிக் கொள்ள முடியாது.
முக்காலமும் உணர்ந்த முனிவன்
//அவர்களின் சூழலை புரிந்து கொள்ளாமல் போராடு, புரட்சி செய் என்ற இடதுசாரி அமைப்புகளின் முழக்கம் மக்களிடம் அந்நியப்பட்டு நிற்கிறது. இந்த இயக்கங்கள் இருக்கின்ற வாழ்க்கையை கெடுத்து விடுவார்களோ என்ற பதட்டம் மக்களுக்கு ஏற்படுகிறது. இடதுசாரி அமைப்புகளின் முழக்கம் நேபாளத்தில் பொருந்தலாம். அங்கே அப்படியான சூழ்நிலை இருந்தது. இன்றைய தமிழகத்தில் அது எடுபடுமா ?///
ம க இ க தேர்தல் புறக்கணிப்பை முன் வைத்து நடத்திய மே 1 மாநாட்டில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.... இது நீங்கள் சொல்லுவது போன்ற நிலை இருப்பதை காட்டவில்லை.
அரசியல் செயலூக்கமின்மையை நாம் மக்கள் மீது பழி போட்டு ஏமாற்றிக் கொள்ள முடியாது.
முக்காலமும் உணர்ந்த முனிவன்
கருனானித்யிடம் ஒரு கேள்வியா?
ஆச்சர்யமாக உள்ளது-
இறந்து போனவர்களிடமும்,பிராணிகலிடமும்,கேள்வி கேட்டால் பதில் கிடைக்காது!
//இன்றைக்கு தேவை மாற்று அரசியலா, தேர்தல் புறக்கணிப்பா ?//
ஜனநாயக நம்பிக்கையோ அல்லது பழக்கப்பட்டுப் போன நடைமுறையோ தேர்தல் புறக்கணிப்பு என்ற மனநிலைக்கு மக்கள் இன்னும் தள்ளப்பட்டு விடவில்லை.மாற்று அரசியல் தேவையென்று மாங்கு மாங்குன்னு பதிவர்கள் பதிவுகள் போட்டும் கூட தி.மு.க,அ.தி.மு.க என்ற இரு கட்சிகளின் பின்னால் அனைவரும் போய் ஒளிந்து கொண்டார்கள்.எப்படியோ புதிய அரசியல் கணக்குகள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது.
ரோசாவசந்த் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கத் தள்ளுவதாகவே நமது தேர்தல் முறை இருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார். எதிர்க்கட்சிக்கான வாக்கினை ஓர் ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்பதுபோன்ற குழப்பம் என்னிடமும் உண்டு.
ஆனால் ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சிக்கு வாக்களி என்று சொல்வதாகவே இந்த வரலாறு நீளப்போகிறது.
கட்சிகளைத் தோற்கடிப்பதை விட மக்களை ஏமாற்றும் சதிவலையான கட்சி ஜனநாயகத்தையே தோகடிப்பது என்ற வகையில் தேர்தல் புறக்கணிப்பு சிறந்த அரசியல் நிலைப்பாடு.
ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்களை எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கப்பழக்குவதை விட, தேர்தல்களூடு படிப்படியாக கட்சி அரசியலுக்கு எதிரான அரசியற்சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியுமானால் அதன் அறுவ்டை பெரியது.
ஈழஅவலத்தால் எழுந்த அரசியற்கொதிப்பை அப்படியே காங்க்ரஸ்-திமுக எதிர்ப்பு என்று அடித்துக்குறுக்கி திசைமாற்றிவிடும் நாடகமே தமிழகத்தில் அரங்கேறுவதாக அவதானிக்கிறேன்.
தூரநோக்கோடு சிந்திக்கும் போது மகஇக வின் நிலைப்பாட்டின் பக்கமே எனது சாய்வு.
எவனைதோற்கடிப்பதையும் விட கட்சி அரசியலையே தமிழ்நாட்டில் தோற்கடித்துவிடக்கூடிய தூரநோக்கிலான அரசியற் செயற்றிட்டத்தை படிப்படியாக முன்னெடுத்தல் ஆரோக்கியமானது.
//போராடு, புரட்சி செய் என்ற இடதுசாரி அமைப்புகளின் முழக்கம் மக்களிடம் அந்நியப்பட்டு நிற்கிறது. //
புரட்சி என்ற ஆழமான வார்த்தையை இவ்வாறு பயன்படுத்துவதில் எனக்கும் உடன்பாடின்மைகள் உண்டுதான். ஆனால் "போராடு" என்பது சரியான கோரிக்கையே.
போராடி மட்டுமே எதயும் மக்களால் உண்மையாகவே சாதிக்க முடிகிறது. பெரியார் தி.க செய்ததும் அதுவே. நேரடியாக தமது கோரிக்கைகளுக்காக மக்களே போராடுவது. இடைத்தரகர்களை அகற்றிவிடுவது.
//இந்த இயக்கங்கள் இருக்கின்ற வாழ்க்கையை கெடுத்து விடுவார்களோ என்ற பதட்டம் மக்களுக்கு ஏற்படுகிறது. //
இது நகர்வாழ், நடுத்தர வர்க்க, உயர்வர்க்க ஆட்களுக்குப் பொருந்தலாம். விளிம்புகளில் இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு அப்படி இருக்குமா என்று சற்று ஆறுதலாக சிந்தித்துப்பாருங்கள்.
அந்த மக்களை சினிமா தொடக்கம் அரசியல்வாத மாய்மாலங்களுக்குள் ஆழ்த்தி ஒடுக்கி வைத்திருக்கிறார்களே, அவர்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லையே... அடுத்தநேர சாப்பட்டுக்கே வழியில்லாமல் போய்க்கொண்டிருக்கிறதே... அவர்களை போராடச்சொல்லி, அவர்களோடு நின்று போராடும் இயக்கம் தானே தேவையாக இருக்கிறது? எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கச்சொல்வதிலும்பார்க்க.
மக்களின் உண்மையான எதிரிகளை இனங்கண்டு தனிமைப்படுத்தி அகற்றும் அரசியல் தூரநோக்கம் முக்கியமானது.. அது நேபாளத்துக்கு மட்டுமல்ல, "ஒரே முட்கம்பி வேலியால் இரண்டாகப்பிரிக்கப்பட்டுள்ள" இந்த முழு உலகத்துக்கும் பொருந்தும். இந்தத் தூரநோக்கத்தோடு அரசியல் வேலைத்திட்டங்களை ஒன்றிணைந்து மக்கள் சார்பாக முன்னெடுப்பதே அவசியமானது. ஆக்கபூர்வமனது.
அதேநேரத்தில் "மக்கள் தொலைக்காட்சியின்" செய்திகள், ஈழம் நேற்றும் இன்றும், சங்கப் பலகை, செய்தி அலசல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழர் நலன் சார்ந்த அக்கறை நிரம்பி இருந்தது. இந்த மாற்றத்துக்கு இத்தொலைக்காட்சியின் பங்களிப்பும் முக்கியமானது என்றே நினைக்கிறேன்.
ம.க.இ.க போன்ற அமைப்புகளின் கொள்கைகளில் எனக்குப் பிடித்தம் இருந்தது. இப்பொழுது அது வெறும் கற்பனாவாத, சாகச மனநிலை போலத் தோன்றுகிறது. எனினும் அவர்கள் மீது பெருத்த மதிப்பு இருக்கிறது.
நானும் ஓர் அலசல் தொடர் எழுதலாம் என்று தொடங்கினேன். http://suresh--jeevanandam.blogspot.com/2009/05/1.html . எதுவும் உருப்படியாக எழுதியிருந்தால் கருத்து சொல்லவும்.
ம க இ க தேர்தல் புறக்கணிப்பை முன் வைத்து நடத்திய மே 1 மாநாட்டில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.... இது நீங்கள் சொல்லுவது போன்ற நிலை இருப்பதை காட்டவில்லை.
*******
10 ஆயிரம் பேர் கலந்து கொண்டது பெரிய விடயமே. ஆனால் தமிழகம் முழுவதுமான மாற்றத்திற்கு இந்த எண்ணிக்கை உங்களுக்கு நம்பிக்கை தருகிறதா ?
தமிழகம் முழுவதும் எவ்வளவு பேர் இப்படியான இடதுசாரி அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளனர் ? எத்தனை பேர் சாதாரண உறுப்பினர்கள்/தீவிர உறுப்பினர்கள் ?
எவ்வளவு பேர் தொடர்ச்சியாக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள் ?
மு.மயூரன்,
எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பது ஒரு நீண்ட கால இலக்கிற்கு சரியான பாதை அல்ல என்பதை நான் அறிவேன்.
விளிம்பு நிலை மக்களும், தொழிலாளிகளும், விவசாயிகளும் இடதுசாரி இயக்கங்களையே நம்ப வேண்டியுள்ளது. மற்ற எந்த இயக்கங்களும் அவர்களுக்கு அந்த நம்பிக்கையை தருவதில்லை. ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் எப்படி சென்றடைவது என்பதே என்னுடைய கேள்வி. குறைந்தபட்சம் அனைத்து விளிம்பு நிலை மக்களையும் கூட இடதுசாரி அமைப்புகளால் ஈர்க்க முடியவில்லையே ?
சுரண்டப்படுகிறோம் என்று உணராமல் தான் இன்றைக்கு பலர் இருக்கின்றனர்.
இந் நிலையில் மக்களின் வாழ்க்கையில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதே என் கேள்வி ?
Pls place your valuable vote at
http://internationaldesk.blogs.cnn.com/
(Should The International Community Intervene In Sri Lanka?)
//விளிம்பு நிலை மக்களும், தொழிலாளிகளும், விவசாயிகளும் இடதுசாரி இயக்கங்களையே நம்ப வேண்டியுள்ளது. மற்ற எந்த இயக்கங்களும் அவர்களுக்கு அந்த நம்பிக்கையை தருவதில்லை. ஒப்புக் கொள்கிறேன்.//
உங்கள் இந்தக்கருத்துத்தான்
//ஆனால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் எப்படி சென்றடைவது என்பதே என்னுடைய கேள்வி. குறைந்தபட்சம் அனைத்து விளிம்பு நிலை மக்களையும் கூட இடதுசாரி அமைப்புகளால் ஈர்க்க முடியவில்லையே ?//
இந்தக்கேள்விக்கான பதிலும்.
ஈழத்தில் புலிகள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்று அவர்கள் தலையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு பெரும்பாலானோர் சும்மாவே இருந்துவிட்டமாதிரி.. குறித்த இடதுசாரி இயக்கங்கள் ஈர்க்க வேண்டும், ஈர்க்கிறதில்லை, பிரசாரம்போதாது போன்ற கருத்துக்களும் அமைந்துவிடும் வாய்ப்புள்ளது.
இடதுசாரி அமைப்புக்களின் சித்தாந்தங்களோடு, அவற்றின் வர்க்கப்பார்வையோடு எம்மால் உடன்பட முடிகிறதானால், அவர்களது போதாமைகளை தீர்க்கும் வழிவகைகளைத்தேடி நாமும் இணைந்து அவர்கள் கைகளைப் பலப்படுத்தவேண்டியதுதான்.
அதிகாரங்கள் அளப்பரிய அடக்குமுறை இயந்திரங்கள்.
(அதிகாரங்கள் தொடர்பான மலைப்பினை, புரிதலை உங்கள் அண்மைய இடுகைகளில் காணக்கூடியதாக இருந்தது)
தனித்தனியாக யாரும் கேள்வி கேட்கமுடியாது. அதிகாரங்களின் கொலைச்சக்தியை மீறி எழும் மக்கள் சக்தியை இயக்க ரீதியாக கட்டியெழுப்புவதொன்றே என் அறிவுக்கெட்டியவரையில் இருக்கும் ஒரே வழி.
இவ்வாறு மக்கள் சக்தியை இயக்கரீதியாக கட்டுவது தானாகவோ, எவர் தயவிலுமோ, தெய்வச்செயலாகவோ நடந்துவிடாதென்பதுதான் யதார்த்தம். இது வேற்றுமைகளில் ஒற்றுமைகள் கண்டு கூடி ஆற்ற வேண்டிய பணி. ஒதுங்க முடியாது.
இடதுசாரி இயக்கங்கள் மக்களைச் சென்றடையவில்லை என்பதாக, வெற்றிபெறவில்லை என்பதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் என் மீதும் உங்கள் மீதுமே வைக்கப்படுகின்றன. நானும் நீங்களும் , மக்கள் மீது அக்கறைகொண்ட ஒவ்வொருவரும்தான் இதற்குப் பதில் சொல்லிஆகவேண்டும்.
இது நல்லதொரு வாய்ப்பான அரசியற் தருணம். நேரடியாக, அனுபவத்தில் அதிகாரம் என்றால் என்ன, வல்லரசு என்றால் என்ன, பாராளுமன்ற ஜனநாயகத்தின் அழுகிய முகம் என்ன, கொலையந்திரங்களின் முகங்கள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் தருணம்.
இதத்ருணத்தை, இந்த நேரடி அனுபவத்தைக்கொணு மக்களை அறிவூட்டி திரட்ட வேண்டிய பணியில் எம்மால் இயன்ற வழிமுறைகளினூடாக இணைய வேண்டியதுதான்.
எனக்கு வேறு வழிகள் தெரியவில்லை.
மக்கள் சார்ந்து சிந்திக்கும் தங்கள் நேர்மையும், மாற்று வழிகள் பற்றிய தங்கள் புரிதலும் மகிழ்ச்சி தருவன.
நன்றிகள்.
நாம் இந்த தேர்தல் திருட்டு விழாவை வைத்து ஆளும் வர்க்கத்திற்கு ஏதோ ஒரு பாடம் கற்பிக்கலாம் என்று கற்பனையில் மிதந்து வந்தாலும், மக்களுக்கு அந்த மயக்கம் இல்லை என்பதை இந்த தேர்தலும் நிரூபித்துள்ளது. கையில் மை இடுவது ஒரு சடங்கு என்ற அளவில் வழமை போலவே மக்கள், தமது தேர்வை இட்டுள்ளனர் இந்த தேர்தலில். இந்த ஜனநாயகத்தில் மிச்சம் ஏதோ உள்ளது என்று கற்பனையில் இருக்கும் நமக்கு இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பு சரியான வேப்பிலையடியாக இருக்கும். மக்கள் யாருக்காவது இந்த தேர்தலில் பாடம் கற்பிக்க இருக்கிறார்கள் எனில் அது போலி ஜனநாயக தேர்தலை ஏதோ ஒரு வகையில் தீர்வாக நம்பும் நமக்குத்தான் அந்த பாடத்தை மக்கள் கற்பிக்க இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட கற்பனையான மயக்கத்தில் இருந்து கொண்டு சரியான அரசியல் திசை வழி நோக்கிய பய்ணத்தை தொடங்காத நமக்குத்தான் மக்கள் பாடம் கற்பிக்கிறார்கள்.
மு உ மு
Post a Comment